2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கிண்ணியா ரீ.பி. ஜயா வித்தியாலய மாணவிகள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 ஏப்ரல் 18 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.பரீத், கியாஸ் ஷாபி


கிண்ணியா ரீ.பி. ஜயா வித்தியாலயத்திற்கு நிரந்தர கட்டிடமொன்றைக் கோரி இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து குறித்த பாடசாலைக்கு கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் எம்.ஐ. சேகு அலி உடனடியாகச் விஜயம் மேற்கொண்டார். இதன்போது இந்த பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தும் மாணவிகள் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை .

கிண்ணியா ரீ.பி. ஜயா வித்தியாலயம் அமைநந்துள்ள கட்டிடம் ஆரம்பத்தில் நெற் சந்தைப்படுத்தும் கட்டிடமாக இருந்து  1994.02.01ஆம் திகதி முதல் பாடசாலையாக மாற்றமடைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் கல்வி கற்பதால் வெயில் காலத்தில் மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்களுக்கு உள்ளாவதாக தெரிவித்தனர்.

சுமார் 750 மாணவிகள் கல்வி பயிலும் இந்த பாடசாலைக்கு நிரந்தர கட்டிட வசதியின்றி மாணவிகள் பெரிதும் சிரமத்திற்கு மத்தியில் தற்காலிக கட்டிடத்தில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பாடசாலை சுனாமி அனர்த்ததினால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் எந்தக் கட்டிட வசதிகளும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைக்கு அருகாமையில் கிண்ணியா தள வைத்தியசாலை அமைந்துள்ளதால் இந்த பாடசாலை எதிர்காலத்தில் வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்படவுள்ளதான ஒரு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.எனவே எங்களுக்கு நிரந்தர கட்டிட வசதியைப் பெற்று தருமாறும் மாணவிகள் உரிய அதிகாரிகளை இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கேட்டுக்கொண்டனர்.





  Comments - 0

  • amusny Friday, 19 April 2013 04:21 AM

    முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினர்களும், அரசாங்க எம்பிக்களும் உள்ள ஊரிலா இந்தப்பிரச்சினை? பாவம் கிண்ணியா மக்கள்... சுகபோக வாழ்க்கை அரசியல் வாதிகள் (அரசாங்க) அமெரிக்க விஜயத்தின் நோக்கம் என்னவோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .