2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

புல்மோட்டை இரட்டைக்கொலை உறவுக்கார பெண் கைது

Kanagaraj   / 2013 ஏப்ரல் 20 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-எஸ்.கீதபொன்கலன்


திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மகசென்புர என்ற கிராமத்தில் இடம்பெற்ற இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜா-எல பகுதியில் வைத்தே குறித்த பெண்ணை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

மகசென்புர என்ற கிராமத்தைச்சேர்ந்த எச்.எம். சூரியபண்டார (வயது 38), ஜீவனிஅனுரதிக்கா (வயது 36) என்ற தம்பதியினர் நேற்ற நள்ளிரவு கொலைச்செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விருவரும் கோடரியால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. அந்த வீட்டிலேயே தங்கியிருந்த உறவுக்கார பெண்ணே அவ்விருவரையும் கொலைச்செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரான இளம் பெண் கொல்லப்பட்டவர்களுடன் அதே வீட்டில் தங்கியிருந்த அதே வேளை கொல்லப்பட்டவர்களின் பிள்ளைகளான  நிமாலி பிரியதர்சினி (வயது 15)  செவ்வந்தி பிரியதர்சினி (வயது 8) ஆகியோரை கொலைச்சம்பவத்தின் பின் தன்னுடன் அழைத்துக்கொண்டு இன்று அதிகாலை திருகோணமலையிலிருநு;து ஜாஎல பிதேசத்திற்கு தப்பிச்சென்றுள்ளார் .

சம்பவம் இடம்பெற்ற வீட்டின் வெளியே கொல்லப்பட சூரியபண்டாரவின் சடலத்தை கண்ட அயலவர்கள் புல்மோட்டை பொலிஸ் நிலயத்திற்கு கொடுத்த தகவலை அடுத்து கொலை பற்றிய விபரங்கள் வெளியாகியது.

பொலிசாரின் தீவிர விசாரனையை அடுத்து கொலைச்சந்தேக நபரும் அவருடன் சென்ற இரு பெண் பிள்ளைகளும்; ஜாஎல பிரதேசத்தில்வைத்து ஜாஎல பொலிசாரினால் இன்று பகல் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் புல்மோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொலைச்சந்தேகநபரான இளம்;பெண்ணுக்கும் கொல்லப்பட்டவர்களின் மூத்த மகளுக்கும் இடையே ஒருபால் உறவு இருந்ததாகவும் அதனை பெற்றோர் கண்டித்ததை அடுத்தே கொலைச்சம்பவம் இடம்பெற்றதாகவும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரைணை மூலம் அறியமுடிந்துள்ளது.

மரணவிசாரணை இன்று காலை திருகோணமலை பதில் நீதவான் த.திருசெந்தில்நாதன் முன்னிலையில் புல்மோட்டை வைத்தியசாலையில் நடைபெற்றது. கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் புல்மோட்டை பொலிசாரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

You May Also Like

  Comments - 0

  • MADURANKULI KURANKAR Saturday, 20 April 2013 04:50 PM

    இரு பால் உறவு என்றால் என்ன?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X