2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சம்பூர் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணல் கூட்டத்திற்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம்

Super User   / 2013 ஏப்ரல் 24 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எச்.அமீர்

சம்பூர் பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தலைமையில் விசேட கூட்டமொன்றை கூட்டுவதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இந்த பிரதேச மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகள் சம்பந்தமாக விசேட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தினை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உயர் அதிகாரிகள், சம்பூர் மக்களின் பிரதிநிதிகள், இந்த பிரச்சினை தொடர்பான ஏனைய அதிகாரிகள் முதலானோரை அழைத்து  கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் விசேட கூட்டமொன்றை கூட்டி சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அங்கீகாரத்தையும் மாகாண அமைச்சரவை வழங்கியுள்ளது.

இந்த அறிவிப்பினை கிழக்கு மாகாண அமைச்சரவை  பேச்சாளரான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X