2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண அமைச்சர்களின் பிரத்தியோக உத்தியோகத்தர்களுக்கு விசேட கொடுப்பனவு

Super User   / 2013 ஏப்ரல் 25 , மு.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எச்.அமீர்

கிழக்கு மாகாண அமைச்சர்களின் பிரத்தியோக உத்தியோகத்தர்களுக்கு விசேட பிராயாண கொடுப்பனவு வழங்க மாகாண அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதனால் முதலமைச்சர் மற்றும அமைச்சர்களின்; பிரத்தியோகச் செயலாளர்கள், இணைப்புச் செயலாளர்கள், பொதுசன தொடர்பு அதிகாரிகள் மற்றும் பிரத்தியோக உதவியாளர் ஆகியோருக்கே இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கு விசேட பிராயாண கொடுப்பனவாக மாதாந்தம் 5,000 ரூபா வழங்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே மாகாண அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ள என மாகாண அமைச்சரைவ பேச்சாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளத்திற்கு மேலதிகமாக மாதாந்தம் 45,000 ரூபா வழங்குவதற்கு அண்மையில் மாகாண அமைச்சரைவ அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • Basit Thursday, 25 April 2013 04:43 AM

    ஓ நல்லா கொட்டிக்கங்க................ ஊரார் பணம்தானே!

    Reply : 0       0

    MMM Thursday, 25 April 2013 04:49 AM

    மக்களின் பணம்.....

    Reply : 0       0

    modi Thursday, 25 April 2013 02:21 PM

    நாங்க கரன்டு காசு கட்ட வழியில்லாம இருக்கம்...!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X