2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

'மண்டையோட்டை ஆசிரியரின் வீட்டின் முன் வைத்து எச்சரிக்கை'

Kanagaraj   / 2013 ஏப்ரல் 25 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}



-கஜன்


திருகோணமலை நகரில் உள்ள பிரபல்யமான  ஆண்கள் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டின் முன்பாக மண்டை ஒடு வைக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

மண்டையோட்டுடன் எச்சரிக்கை செய்யும் வாசகம் அடங்கிய பதாகையொன்றும் வைக்கப்பட்டுள்ளது.

அதில் 'பாடசாலை மாணவர்களது சிகை அலங்கார விடயங்களில் அடிமைப்படுத்த வேண்டாம்;' என எழுதப்பட்டுள்ளதுடன்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் என்றும் உரிமைகோரப்பட்டுள்ளது.

ஆசிரியரின் வீட்டிற்கு முன்பாக நேற்று புதன்கிழமை இரவே மண்டையோடு வைக்கப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை அதிகாலை கதவைத் திறந்த ஆசிரியர் இதனைக் கண்டு அச்சமடைந்ததுடன் இது தொடர்பில் திருகோணமலை பொலிஸிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளதுடன்  இராணுவத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • sivanathn Thursday, 25 April 2013 07:36 AM

    ஆசிரியர் வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது கடிதமே.

    Reply : 0       0

    ரதீஸ்வரன் சதுர்சன் Thursday, 25 April 2013 08:54 AM

    இவ்வாறு செய்த மாணவர்களை கண்டுபிடித்து ஒழுங்கான தண்டனை வழங்க வேண்டும். கண்டுபிடிக்காவிட்டால் ஏனைய மாணவர்கள் பயப்பட மாட்டார்கள்...

    Reply : 0       0

    vallarasu Thursday, 25 April 2013 03:40 PM

    எப்படியும் நமது நாடு அமரிக்காவை மிஞ்சி விடும்போல் இருக்குதப்பா...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X