2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

உயிரை கொடுத்தாயினும் தொழிலாளர் உரிமைக்காக போராடுவேன்: ஹில்மி

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 27 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒன்றுகூடல் நேற்று வெள்ளிக்கிழமை கிண்ணியா பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

அன்றாடம் தமது ஜீவநோபாயத்திற்காகவும் தமது குடும்ப நிலையினையும் கருத்திற் கொண்டு உழைப்பிற்காக தன் வியர்வையை நிலத்தில் சிந்தி உழைக்கின்ற ஒருவனின் உரிமைகள் மறுக்கப்படும்போது வேலை கொள்வோர் மீதான போராட்டம் ஆரம்பமாகிறது.

அந்தவகையில் தனியார் நிறுவனங்களில் தொழிலுக்காக செல்லும் தொழிலாளர்கள் ஏற்பாடு செய்த ஒன்று கூடலின்போது தொழிலாளர்களின் உரிமைகள் தொழில் தருநரின் கடமைகள் சம்பந்தமாக குறித்த ஒன்றுகூடல் அமைந்திருந்தது.

குறித்த நிகழ்வுக்கு அதிதியாக அழைக்கப்பட்ட கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி சட்டத்தரணி தமது உரையில் 'தொழிலாளர்களின் உரிமைகளை உங்களால் வெற்றிகொள்ள முடியும் அந்த அந்தஸ்தை நீங்கள் பெறமுடியும்.

வியர்வை சிந்தும் உங்களால் உரிமைகளை வென்றெடுக்க போதுமான வளங்கள் இன்று நிறையவே காணப்படுகின்றது. அதனால் வென்றெடுக்க முடியும்.

இன்று தொழிலாளர்களாக ஒடுக்கப்பட்டிருக்கின்ற நிலைமை நமக்கு வருவதற்கு பொருளாதார குறைவே காரணமாக இருப்பதை நாம் மறுக்கமுடியாது. எமது உரிமைத்தேடல் நீதிமன்றம் சென்றால் கூட தொழில் தருநர் பக்கம் இல்லாமல் தொழிலாளர்கள் பக்கமே நியாயம் பெற்றுக்கொடுக்க நீதிமன்றம் துணைபுரியும் என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

இன்னும் உங்கள் உரிமைகளை வென்றெடுக்கும் பாரிய முயற்சிக்கு என் உயிரை கொடுத்தாவது நான் உங்களுக்கு உதவி செய்ய கடமைப்பட்டுள்ளேன்' என நகரபிதா தெரிவிக்க வருகை தந்திருந்த மேன் முறையீட்டு நீதிமன்ற பதிவாளர் நியாஸ் தொழில் தருநருக்கும் தொழிலாளருக்கும் இடையேயான விடயங்களை தெளிவுபடுத்தியதோடு தொழிலாளருக்கான உரிமைகளையும் அது எவ்வாறு நசுக்கப்படுகிறது. தொழில் தருநர்கள் அவற்றை எவ்வாறு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்பதை தெளிவுபடுத்தினார்.

இச்சந்திப்பின் இறுதியில் தொழிலாளர் உரிமைக்கான 10 போர் கொண்ட குழுவும் தெரிவு செய்யப்பட்டதோடு குறித்த சந்திப்பின் உரிமை விடயத்தை உடன் நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இச்சந்திப்பின் போது பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் பித்தியே செயலாளர் ரைசுதீன் மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமைபுரியும் தொழிலாளர்கள் பலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X