2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

புல்மோட்டை கனிப்பொருள் கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 30 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிகுமார்


புல்மோட்டை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணிநேர அடையாள பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டுத்தாபனத்தில் நடைபெறும் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமக்கு வழங்குவதற்கு இணக்கம் செய்யப்பட்டிருந்த கொடுப்பனவு, போக்குவரத்து கொடுப்பனவு என்பவை வழங்கப்படாமையைக் கண்டித்தும் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

கனிப்பொருள் மணல் கூடடுத்தாபன நிறைவேற்றுப் பணிப்பாளர் டிசான் குணசேகர, கனியவள அமைச்சர் தயாசிறி த திசேரா ஆகியோர் இக்கொடுப்பனவுகள் பங்குனி மாத சம்பளத்துடன் வழங்குவதாக உறுதி அளித்திருந்தனர் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்கம். ஐக்கிய வர்த்தக தொழிலாளர் சங்கம் ஆகிய அரசு சார்பு தொழில் சங்கங்கள் இப்போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

ஒருவார காலத்திற்குள் தமக்கான கொடுப்பனவு வழங்கப்பட தவறும் பட்சத்தில் தொடர்ச்சியான பணி பகிஸ்கரிப்பு பொராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தொழில் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X