2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சம்பூரிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் குடும்பங்களை மீளக்குடியமர்த்தவும்: தண்டாயுதபாணி

Kanagaraj   / 2013 மே 01 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பூர் பிரதேசத்திலிருந்து 2006 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட தமிழ்க் குடும்பங்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அரசியல் பிரச்சினையாகக்கருதாமல் மனிதாபிமானப் பிரச்சினையாக அரசாங்கம் கருதி அம்மக்களை அவர்களின் வாழ்விடங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு கேட்டுக்கொண்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமை ஆகியோரின் இணைத்தலைமையின் கீழ் கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

 '2006 ஆம்ஆண்டு சம்பூர் பிரதேசத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து அவர்கள் வாழ்ந்த 9600 ஏக்கர் நிலம் உயர்பாதுகாப்பு வலயம் என்றுஅரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது.

இப்பொழுது உயர்பாதுகாப்பு வலயம் என்ற பேச்சுக்கு பதிலாக பொருளாதார ஊக்குவிப்பு வலயம் என்றழைக்கப்படுகின்றது.
அனல் மின்னிலையம் அமைப்பதற்காக 540 ஏக்கர் காணியும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்காக 818 ஏக்கர் காணியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, எஞ்சியுள்ள காணிகளில் இடம்பெயர்ந்து வேதனைகள் மத்தியில் நலன்புரிமுகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 1086 குடும்பங்களையும் மீளக்குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .