2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

புல்மோட்டை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் உண்ணாவிரதம் தொடர்கின்றது

Suganthini Ratnam   / 2013 மே 06 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எச்.அமீர்,-சிங்காரவேலு சசிகுமார்


திருகோணமலை, புல்மோட்டை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தின்  ஊழியர்கள் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டமையை கண்டித்து இரண்டாவது நாளாக இன்று திங்கட்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகின்றது.

புல்மோட்டை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்த  13 ஊழியர்கள் கடந்த 11.05.2010 இல் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

புல்மோட்டை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தின்  முன்னாலுள்ள புல்மோட்டை பஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இவர்கள் தங்களுக்கு நியமனம் வழங்க வேண்டுமெனக் கோரியுள்ளனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து புல்மோட்டை பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளதுடன்,  நூற்றுக்கணக்கானோர் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திலும் திரண்டுள்ளனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .