2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

புல்மோட்டை அரபாத் வித்தியாலத்தின் புதிய அதிபரிடம் பொறுப்புக்களை ஒப்படைக்க மறுப்பு

Super User   / 2013 மே 06 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிகுமார், வடமலை. ராஜ்குமார்


திருகோணமலை, புல்மோட்டை அரபாத் வித்தியாலத்தின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டவர் கடமைகளை பொறுப்பேற்க வந்தபோது பொறுப்புக்களை ஒப்படைக்க தற்போதைய அதிபர் மறுத்துள்ளார். இதனால் இப்பாடசாலையில் நிர்வாக  சீர்கேடு ஏற்பட்டள்ளது. இது தொடர்பாக திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளரிடம் முறையிடப்பட்டுள்ளது. 

விடயம் அறிந்த வலயக் கல்வி பணிப்பாளர் குறித்த பாடசாலைக்குச் சென்றும்  நிலமையயை கட்டுப்படுத்த முடியாத திருமபி விட்டார். இச்சம்வம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

"அதிபர் தரம் 2.1 சேர்ந்த ஆமினா சலீம் நேர்முக பரீட்சை ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்டு குறித்த பாடசாலையில் அதிபராக  கடமை ஏற்குமாறு வலயக் கல்வி பணிப்பாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதன் படி  குறித்த அதிபர் கடமை ஏற்க அரபாத் வித்தியாலத்திற்கு இன்று சென்றபோது அங்கு கடமை நிறைவேற்ற அதிபராக  பணியாற்றும்  ஏ.ஏ. காதர் என்பவர் கடமை பொறுப்புகள வழங்க மறுத்ததுடன்  புதிய  அதிபரை தரம் குறைவாககும் பேசியுள்ளார்.

தரம் உள்ள அதிபரை கடமை ஏற்க  விடாதமை குறித்த பாடசாலையின் மீது அரசியல் செல்வாக்கு செலத்தப்படுவதாக  குச்சிவெளி பிரதேச  சபையின் பிரதி தலைவர் ஆதம்பாவா தௌபீக் தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

அரபாத் வித்தியாலயத்திற்கு குச்சவெளி கோட்டக் கல்வி அதிகாரி எம்.எம்.சம்சுதீனுடன் சென்ற வலயக் கல்வி பணிப்பாளர் கடமை நிறைவுற்று அதிபரிடம் பாடசாலை பொறுப்புக்களை கையளிக்குமாறு கேட்ட போதிலும் அதிபர் அதனை மறுத்து விட்டார்.

அரபாத் வித்தியாலயத்தின் பெற்றோர்கள் வலயக் கல்வி பணிப்பாளரை சந்தித்து நிலைமையை சீர்படுத்தி தமத பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.  பெற்றோர் பிரதிநிதிகளை புதன்கிழமை தனது அலுவலகததிற்கு வருகை தருமாறு கேட்டுக்கொண்ட வலயக் கல்வி பணிப்பாளர், புதிய அதிபர் திருமதி ஆமினாவுடன் பாடசாலையில் இருந்த வெளியேறினார்.

இதேவேளை, குச்சவெளி விவேகானந்தா மகா வித்தியாலயத்திலன் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து கிழக்கு மாகாண கல்வி அலுவலகத்திற்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கஷ்டப் பிரதேசமான தமது பகுதிக்கு 6 மாத காலமாக ஓர் அதிபர்  இல்லாது இயங்கி வந்த பாடசாலைக்கு கடந்த மூன்று மாத காலமாக சிறப்பாக இயங்கிவந்த அதிபரை இடமாற்றம் செய்துள்ளனர்.
 
அத்துடன் 1சீ தரமுள்ள பாடசாலையான தமது பாடசாலைக்கு 2ஆம் தரத்தில் உள்ள அதிபரை நியமி்தமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .