
-கஜன்
மூதூர் கிழக்கில் இலங்கை இராணவத்தின் 22ஆவது படைப்பரிவின் ஏற்பாட்டில் மேலும் 28 வீடுகள் நிர்மாணம் செய்யப்பட்டள்ளன. சீதனவெளி கிராமத்தில் இவ் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பட்டித்திடல், கிளிவெட்டி, கட்டைபறிச்சான் ஆகிய நலன்புரி நிலையங்களில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கு இவ் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வீடுகள் நேற்றைய தினம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி லால் பெரேரா அவசரவேளை காரணமாக வெளியூர் சென்றமையினாலும் மாவட்ட செயலாளரின் வருகையின்மையாலும் கையளிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் அடுத்தவாரம் பயனாளிகளுக்கு இவ்வீடுகள் கையளிக்கப்படவுள்ளதன.
9.5 மில்லியன் ரூபாய்கள் செலவில் இவ்வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்ட கட்டளைத்தளபதி பிரிஹேடியர் அருணு வன்னியாராச்சி, பிரிஹேடியர் எஸ்.பி.செனவிரத்தனவுடன் நேற்று வெள்ளிக்கிழமை இக்கிராமத்திற்கு விஜயம் செய்து பயனாளிகளுடன் வீட்டுத் திட்டம் பற்றி அளவாளாவினர்.
400 சதுர அடிகள் கொண்டதாக 3 படுக்கை அறைகள், ஒரு வரவேற்பு மண்டபம், சமையல் அறை, மலகூடம் என்பன அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வீடுகள் சர்வதே இந்திய திரைப்பட கல்லூரி நிதி உதவியுடன் ஹபிடாற் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இராணுவத்தின் மேற்பார்வையில் இவ் வீடுகளின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்றன. கட்டுமாணப் பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டனர்.