2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பாம் பவுன்டேசன் நிறுவனத்தின் அபிவிருத்தி பணிகள் தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2013 மே 16 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


கிழக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துவரும் பாம் பவுன்டேசன் நிறுவனத்தின் பணிகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையினை தெளிவு படுத்தும் கலந்துரையாடல நேற்று மாலை திருகோணமலை ஒசின் ஹோட்டலில் இடம்பெற்றது.

பாம் பவுன்டேசன் அமைப்பின் பணிப்பாளர் சுனில் தொம்பே பொல தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபயகுனவர்த்தன, முதலமைச்சரின் செயலாளர் அசீஸ், திட்டமிடல் பணிப்பாளர் தமிழ்ச்செல்வன், மாகாண பொரியியலாளர் கௌரிபாலன் உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு கோடி நிதியில் இடம்பெற்றுவரும் நீர் வடிகான் மற்றும் மலசலகூடத்திட்டம், திருகோணமலை, கொக்குலாய், மட்டு, ஊரணி, களப்பு மீனவர்களின் வாழ்வாதார திட்டம் மற்றும் நுண்கடன் திட்டம் தொடர்பாக ஆராயப்பட்டது.

அத்துடன் கிழக்கின் அபிவிருத்தி திட்டங்களை திட்டமிடவும் மீளாய்வு செய்யவும் தொழில்நுட்பக்குழு ஒன்று அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .