2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

தொட்டில் கயிறு இறுகி சிறுவன் மரணம்

Suganthini Ratnam   / 2013 மே 16 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கியாஸ் ஷாபி , எம்.பரீத்

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, கட்டையாற்று பிரதேசத்தில் தொட்டில் கயிறு கழுத்தில் இறுகி சிறுவன் ஒருவன் இன்று வியாழக்கிழமை  உயிரிழந்துள்ளான்.

பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் ஜிப்ரி அகீல் (வயது 10) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சிறுவனின் தாய் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் செய்து வருவதாலும் தந்தை கொழும்பிலுள்ள கடையொன்றில் தொழில் செய்து வருவதாலும் அம்மம்மாவின் பராமரிப்பிலேயே இச்சிறுவன் இருந்து வந்துள்ளான்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X