2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தான் கப்பலை கிழக்கு மாகாண முதலமைச்சர் பார்வை

Suganthini Ratnam   / 2013 மே 17 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிங்காரவேலு சசிகுமார்
 
திருகோணமலை, அஸ்ரப் இறங்குதுறையில் தரித்து நிற்கும் பாகிஸ்தான் நாட்டு யுத்தக் கப்பல் சைஃப் இற்கு கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் மாகாண  அமைச்சர் குழுவினர் நேற்று வியாழக்கிழமை மாலை சென்று பார்வையிட்டனர்.

இந்தக் கப்பல்  திருகோணமலைக்கு விஜயம் செய்ததன் ஞாபகார்;த்தமாக முதலமைச்சருக்கு கப்பல் கப்டன் அகமட் நினைவுச்சின்னம ஒன்றையும்  வழங்கி கௌரவித்தார். அத்துடன், இரவு நேர விருந்துபசாரமும் இவர்களுக்கு அளிக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை நங்கூரமிட்ட இக்கப்பல் இன்று வெள்ளிக்கிழமை அஸ்ரப் துறைமுகத்தில் இருந்து தமது பயணத்தைத் தொடர்கின்றது.

இதில் வந்திருந்த 188 கடற்படை வீரர்களும் 14 அதிகாரிகளும் திருகோணமலை மாவட்டத்தில் முக்கியமான  இடங்களைப் பார்வையிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .