2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் மொழித்தின போட்டி ஒத்திவைப்பு

A.P.Mathan   / 2013 மே 18 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சசிகுமார்
 
கிழக்கு மாகாண தமிழ் மொழித்தின போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னர் இப்போட்டி இன்று சனிக்கிழமை நடைபெறும் என அறிவிப்பு வழங்கப்பட்டு இருந்தது. 
 
போட்டியாளர்கள் வெள்ளிக்கிழமை மாலை மூதூர் கிழக்கு சேனையுர் மத்திய கல்லூரிக்கு வந்து பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரப்பட்டு இருந்தது. போட்டியார்கள் பதிவுக்கு சென்றவேளை போட்டி ஒத்திவைக்கப்பட்ட விடயம் தெரிவிக்கப்பட்டது.
 
இதனால் தூர இடங்களில் இருந்து வந்த போட்டியாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
 
இதேவேளை திருகோணமலை கல்வி வலய மெய்வல்லுநர் போட்டிகளும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக உடற்கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் யாக்குப் ஜான் குறுந்தகவல் மூலம் விளையாட்டு பொறுப்பாசிரியர்களுக்கு அறிவித்துள்ளார். பாடசாலைகளுக்கு எந்த அறிவித்தல்களும் விடுக்கப்படவில்லை. முன்னர் இப்போட்டி திங்கட்கிழமை நடத்தப்படும் என குறுந்தகவல் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X