2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கிறிஸ்தோபர் தீல் திருமலைக்கு விஜயம்

Kanagaraj   / 2013 மே 22 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிகுமார்

கொழும்பில் உள்ள அமெரிக்க நிலையத்தின் ஊடகத்துறை. விருத்தி மற்றும் கல்வி விவகாரங்களுக்கான பணிப்பாளர் கிறிஸ்தோபர் தீல் திருகோணமலைக்கு இன்று புதன்கிழமை விஜயம் செய்தார்.

திருகோணமலை ஊடக இல்லத்திற்கு விஜயம் செய்த அவர். திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் உறுப்பினர்களைச் சந்தித்து விபரங்களைக் கேட்டறிந்து கொண்டார்.

நாடு முழுவதிலும் 1000 ஊடகவியலாளர்கள் பயிற்றப்பட்டுள்ளார்கள். ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிகள் மாநாடுகள் என்பன நடத்தப்பட்டு அவர்களின் ஆற்றல்களை வெளிக் கொணர்வதற்கு அமெரிக்க நிலையம் தயாராக  இருப்பதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பொது நூல் நிலையத்தில் அமெரிக்க நிலையம் ஒன்றும் விரைவில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திட்டார்.

கொழும்புக்கு வெளியே அமைக்கப்படும் மூன்றாவது நிலையம் இதுவாகும். முன்னர் கண்டி யாழ்ப்பாணத்தில் இவ்வாறான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னர் பணிப்பாளர் குழுவினரும் நகர சபை உறுப்பினர்களும்  புல்மோட்டை வீதியில் உள்ள லக்ஷ்ம நாராயணர் கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X