2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஆங்கிலம், கணினி பயிற்சிகள் முடித்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

A.P.Mathan   / 2013 மே 24 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிகுமார்
 
திருகோணமலை உயர் தொடர்பாடல் தொழிநுட்ப கல்வி சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் ஆங்கிலம், கணினி பயிற்சிகள் முடித்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை   நடைபெற்றது. 
 
நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி முதன்மை விருந்தினராகவும், அமெரிக்க நிலையத்தின் ஊடகம், கல்வி, கலாசார அலுவல்கள் பணிப்பார் கிறிஸ்தோபர் தீல் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர். 
 
4 மாத காலம் பயிற்சியை புர்த்திசெய்த 100 பேருக்கு இங்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவர்களில் 50 இளைஞர்கள் மூதூர் கட்டைபறிச்சான் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
 
நிகழ்வின் முடிவில் இப்பயிற்சிக்கு நிதி வழங்கிய அமெரிக்க நிலையத்தின் பணிப்பாளருக்கு நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் வ.கலைச்செல்வன், கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி உடன் இணைந்த நினைவுச் சின்னமாக சான்றிதழ் ஒன்றினையும் வழங்கி வைத்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X