2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கிண்ணியா பிரதேசத்தில் பல கொங்கிறீட் வீதிகள் திறந்து வைப்பு

A.P.Mathan   / 2013 மே 24 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழிகாட்டலின் கீழ் ஜெய்கா திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட பல கொங்கிறீட் வீதிகள் கிண்ணியா பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
 
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன, வீடமைப்பு நிர்மாணமும் அமைச்சர் எம்.எஸ்.உதுமான் லெப்பை மற்றும் கிண்ணியா நகர சபைத் தவிசாளர் எம்.எம்.ஹில்மி மஹ்ரூப் ஆகியோரால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
 
இந்தவகையில் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள பூவரசந்தீவு பிலாக் கொட்டவீதி, ஆலங்கேணி வீதி, அல்-அக்ஷா ஒரீக்கன் வீதி, காக்காமுனை ஆதம் பாவா வீதி போன்றன திறந்து வைக்கப்பட்டன.
 
இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.




 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X