2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கிறிஸ்தவர் வாலிபர் சங்கத்தின் தேசிய பேராளர் மாநாடு

A.P.Mathan   / 2013 மே 25 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்
 
கிறிஸ்தவர் வாலிபர் சங்கத்தின் தேசிய பேராளர் மாநாட்டின் 48ஆவது ஆண்டு நிகழ்வு இம்முறை திருகோணமலையில் இடம்பெற்றது.
 
இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் திருகோணமலை அலஸ்தோட்டத்தில் அமைந்துள்ள மாதுமை அம்பாள் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக திருகோணமலை மறை மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்கள் கலந்து கொண்டார்.
 
அத்துடன் ஏனைய அதிதிகளாக கிறிஸ்தவர் வாலிபர் சங்கத்தின் தேசிய தலைவர் பெளிசியன் மற்றும் திருகோணமலை மாவட்ட தலைவா் கீதபொன்கலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இந்நிகழ்விற்காக இலங்கையில் உள்ள 38 கிறிஸ்தவர் வாலிபர் சங்கத்தின் பிரதிநிதிகளான 175 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X