2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சரத் நிமால் சில்வா வீதி திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 மே 26 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிகுமார்


திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பகுதியையும் பொலன்னறுவை மாவட்டத்தின் சோமாவதி பகுதியையும் இணைக்கும் புதிய வீதியான  சரத் நிமால் சில்வா வீதியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை திறந்துவைத்தார்.

அத்துடன், இந்த வீதியில் மகாவலி ஆற்றுக்கு மேலாக  அமைக்கப்பட்ட 183 மீற்றர் நீளமான தற்காலிக பாலமும் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களின்; பாவனைக்கு விடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, கிழக்கு மாகாண  முதல் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X