2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மின் தாக்கி சிறுமி மரணம்

Suganthini Ratnam   / 2013 மே 26 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

குளிப்பதற்காகச் சென்றுகொண்டிருந்த மாணவி ஒருவர் மின் தாக்குதலுக்கு இலக்காகி  உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் வான் எலபொலிஸ் பிரிவில் உள்ள  பன்சல கொடல் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஜெயந்திபுர மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் எச்.என்.மதுவந்தி (வயது 13) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொதுக் கிணறு ஒன்றில் குளிப்பதற்காக சென்றுகொண்டிருந்த இந்த மாணவி, வேலியின் ஊடாகச் சென்றுகொண்டிருந்த சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .