2025 மே 12, திங்கட்கிழமை

பாம்புக்கடிக்குள்ளானவர் வைத்தியசாலையில்

Kanagaraj   / 2013 மே 31 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பாம்புக்கடிக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் அலிஒலுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பெரியாஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஈச்சிலம்பற்று சின்னக்குளம் வாசியான 34 வயதுடைய நவரெத்தினம் சிவகுமார் எனும் குடும்பஸ்தரே பாம்புக்கடிக்குள்ளாகியுள்ளார்.

வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவரை விஷப்பாம்பு தீண்டியுள்ளது.

பாம்புக்கடிக்குள்ளான அவரை உறவினர்கள்; உடனடியாக அருகிலுள்ள அலிஒலுவ வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் மேலதிக அவசர சிகிச்சைக்காக அவரை திருகோணமலைக்கு அனுப்பி வைத்ததாக அலிஒலுவ வைத்தியர்கள் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X