2025 மே 12, திங்கட்கிழமை

பெரிய கிண்ணியா பிரதேச வீடொன்றில் திருட்டு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 02 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.பரீத்

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய கிண்ணியா பிரதேசத்திலுள்ள  வீடொன்றிலிருந்து சுமார் 70,000 ரூபா பெறுமதியான தொலைக்காட்சிப்பெட்டியொன்று கொள்ளையிடப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் அவ்வீட்டின் பின்பக்க வழியாக வந்த இனந்தெரியாதோரே கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டு உரிமையாளர் அதிகாலை தொழுகைக்காக எழுந்தபோது வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி காணாமல் போயுள்ளமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • sivanathan Sunday, 02 June 2013 09:34 AM

    இவ் வீடு கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீது அவர்களின் வளவில் இருப்பது தெரியாதா...??

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X