2025 மே 12, திங்கட்கிழமை

கிண்ணியா நகரசபைக்குள்ளான வீதிகள் சட்டபூர்வமாக பதிவு

Kogilavani   / 2013 ஜூன் 04 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்

கிண்ணியா நகரசபை எல்லைக்குள் காணப்படும் வீதிகள், சிறுவீதிகள், நகரசபைக்குள் உள்வாங்கப்படாத வீதிகளை உள்வாங்கி புதிய வீதிகளுக்கும் பெயர்கள் வைக்கப்பட்டு சட்டப்பூர்வமாக பதிவு செய்து வர்த்தமானி மூலம் வெளியிடுவதற்கான நடவடிக்கையினை கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி மேற்கொண்டு வருகின்றார்.

இது தொடர்பான கூட்டம் நகரபிதா தலைமையில் நேற்று திங்கட்கிழமை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு முடிவெடுக்கப்பட்டது.

கிண்ணியா நகரசபை எல்லைக்குட்பட்ட 17 கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள வீதிகளின் பெயர்களே இவ்வாறு பதியப்படவுள்ளன. புதிய வீதிகளுக்கான பெயர்களும், வீதிகளும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X