2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கணவனை கத்தியால் குத்திய கர்ப்பிணி

Kogilavani   / 2013 ஜூன் 06 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

எட்டுமாத கர்ப்பிணியான மனைவி தனது கணவனை கத்தியால் குத்திய சம்வமொன்று திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
 
கணவரை கத்தியால் குத்திய குறித்த கர்ப்பிணிப்பெண் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 க்கு அழைப்பை ஏற்படுத்தி  கணவன் தன்னை தாக்குவதாகவும் முறையிட்டுள்ளார்.

 சம்பவத்தில் சிவில் பாதுகாப்பு படை வீரரான 24 வயதான டபிள்யூ.சம்பத் தெவனிபியவர என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

மகதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்;ட அவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.

கணவரை கத்தியால் குத்திய மனைவி தன் வயிற்றில் கணவன் காலால் உதைத்ததாக கூறி அவரும் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக  விசாரணைகளை மொறவௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X