2025 மே 12, திங்கட்கிழமை

குறிஞ்சாக்கேணி ஆற்றில் முதலை: அச்சத்தில் மக்கள்

Kanagaraj   / 2013 ஜூன் 07 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கியாஸ் ஷாபி

கிண்ணியா குறிஞ்சாக்கேணி ஆற்றில் கடந்த மூன்று நாட்களாக 5 அடி  நீளமான முதலையொன்று உலா வருவதால் இவ்வாற்றில் வாழ்வாதார தொழில் செய்து வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்னர்.

இவ்வாற்றில் நாளாந்தம் இறால் பிடித்தல், மட்டியெடுத்தல், தென்னங் ஓலை ஊறப்போடுதல் போன்ற பல்வேறு தொழில்களை இப்பிரதேசவாசிகள் செய்து வருவதோடு விடுமுறை நாட்களில் மாணவர்கள் நீராடி பொழுது போக்கை கழித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக மீனவர்கள் முதலையையைப் பிடிப்பதற்கு முயற்ச்சி எடுத்து வருகின்ற போதும் முதலையைப் பிடிக்க முடியாதுள்ளது.

இதன்காரணமாக வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் உதவியோடு பிடிக்குமாறு இப் பிரதேசவாசிகள் கிண்ணியா நகரசபை தவிசாளரிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X