2025 மே 12, திங்கட்கிழமை

பொலிஸ்மா அதிபர் கிழக்கிற்கு விஜயம்

Kogilavani   / 2013 ஜூன் 12 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ்மா அதிபர் இளங்கக்கோன் நாளை வியாழக்கிழமை கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின்  அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குவது  தொடர்பான உயர்மட்ட மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காகவே அவர் அங்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.

இந்தக்கூட்டம்,  நாளை வியாழக்கிழமை திருகோணமலை ஆளுநர் செயலகத்திலேயே காலை 10 மணிக்கு  இடம்பெறவுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து விடுத்த வேண்டுகோளையடுத்து இம்மாநாடு இடம்பெறவுள்ளது.

இம்மாநாட்டில், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள், பிரதி பொலிஸ்  மா அதிபர்கள், உதவி பொலிஸ்; மா அதிபர்கள் உட்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

மாகாண அமைச்சர்கள் உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டதையடுத்தே முதலமைச்சரால் இம்மாநாடு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X