2025 மே 12, திங்கட்கிழமை

வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் கையளிப்பு

Kogilavani   / 2013 ஜூன் 13 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


வெருகல் பிரதேசத்திற்குட்பட்ட வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை வெருகல் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்; பிரதேச செயலாளர் பி.தனேஸ்வரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை கையளித்தார்.

திருகோணமலை மாவட்டத்தை மையப்படுத்தி இயங்கிவரும் 'அகம்' உள்ளூர் அரச சார்பற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமானது இத்துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளது.

பாடசாலைகளுக்கு நீண்டதூரம் சென்று கல்வி கற்றுவரும் வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை பெற்றுக்கொடுக்கும் திட்டத்தை 'அகம்;' தன்னார்வத் தொண்டு நிறுவனமானது அமுல்படுத்தி வருவதாக திட்ட இணைப்பாளர் ரீ.திலீப்குமார் தெரிவித்தார்.

இதற்கமைவாக, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பாடசாலை மாணவர்கள் இதற்கு தெரிவுசெய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்திற்கவைமாக நேற்று 4 பாடசாலை மாணவர்கள் இத்திட்டத்தின்கீழ் தெரிவுசெய்யப்பட்டு துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X