2025 மே 12, திங்கட்கிழமை

கோணேசபுரி சுனாமி குடியிருப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்

A.P.Mathan   / 2013 ஜூன் 15 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார் 
 
திருகோணமலை கோணேசபுரி சுனாமி குடியிருப்பு மக்கள் இன்று சனிக்கிழமை பகல் 1 மணி முதல் 3 மணிவரை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
 
கோணேசபுரி சுனாமி குடியிருப்பில் தற்போது 372 வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாகவும் ஆனால் இதில் 249 வீடுகளில் மட்டுமே மக்கள் குடியிருந்துவருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
 
இதில் 123 வீடுகள் பூட்டப்பட்டுள்ளபோதும் 85 வீடுகளில் ஏற்கனவே வீடுகள் இல்லாத ஏழை மக்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றார்கள்.
 
இதனிடையே இந்த வீடுகளுக்கு உரிமையானவர்களுக்கு உறுதிப்பத்திரம் வழங்குவதற்கு அறிவித்தல் விடுத்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் எதிர்வரும் 14 தினங்களுக்குள் வீடுகளைவிட்டு இந்த 85 குடும்பங்களையும் எழும்புமாறு அறிவித்தல் விடுத்துள்ளதை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக ஆர்ப்பாட்டக்காரா்கள் தெரிவிக்கின்றனர். 
 
மேலும், வீடுகள் இல்லாத தம்மை உடனடியாக எழும்பச் சொன்னால் தாம் எங்கு செல்வது என ஆர்ப்பாட்டக்காரா்கள் கேள்வி எழுப்புகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X