2025 மே 12, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பு; ஆளுங்கட்சி பகிஷ்கரிப்பு

Kanagaraj   / 2013 ஜூன் 18 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கியாஸ் ஷாபி

கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் கறுப்பு பட்டியணிந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

13 ஆவது திருத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டாம் என்றுக்கோரியே அவர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண சபையமர்வு இன்று நடைபெற்றது. சபையமர்வின் போது எதிர்க்கட்சிகளை சேர்ந்த சகல உறுப்பினர்களும் பிரசன்னமாய் இருந்தபோதிலும் ஆளும் கட்சியில் ஒரு உறுப்பினர் மட்டுமே சமூகமளித்திருந்தார்.

ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினரான ஜயந்த விஜயசேகர மட்டுமே வருகைதந்திருந்தார்.

இந்த பகிஷ்கரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், 'கிழக்கு மாகாணசபை அதிகாரங்களில் ஆளுநர் மேலாதிக்கம் செலுத்தி வருவதைக் கண்டித்து அரச மேல் மட்டத்தில் முறையிட்டும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. 

இந்த இழுபறி நிலையைக் கண்டித்தே ஆளும் தரப்பு உறுப்பினர்களான நாம் நேற்றைய சபை அமர்வை பகிஷ்ரித்துள்ளோம்' என தெரிவித்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சகலரும் பிரசன்னமாய் இருப்பதனால் கூட்டத்தை நடத்துவதற்கு சபையின் தலைவர் ஆரியவதி கலப்பதி தீர்மானித்தார்.

முதலமைச்சர் அப்துல் மஜிட் காலை 10.30 மணியளவிலேயே வருகைதந்தார். இந்த சபையில் ஆளும் தரப்பில் 22 உறுப்பினர்களும் எதிரணியில் 17 உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையிலேயே 13ஆவது திருத்தத்தில் எவ்விதமான மாற்றங்களையும் ஏற்படுத்தவேண்டாமென கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்ததுடன் அந்த முயற்சிக்கு கூட்டமைப்பினர் கறுப்பு பட்டியணிந்து கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X