2025 மே 12, திங்கட்கிழமை

மின்சார கட்டண அதிகரிப்பை எதிர்த்து திருமலையில் ஆர்ப்பாட்டம்

A.P.Mathan   / 2013 ஜூன் 18 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்
 
திருகோணமலை, துளசிபுரம் மக்கள் நேற்று திங்கட்கிழமை மதியம் இலங்கை மின்சார சபை லவ்லேன் பிரதான அலுவலகத்தின் முன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
மின்சாரத்தின் கட்டணவிலை அதிகரிப்பு காரணமான வாழ்க்கை நடத்த முடியாதுள்ளது. இவ்வாறு அடிக்கடி விலை அதிகரிப்பதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது. இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு ஒன்று மின்சாரசபை அதிகாரிகளிடம் கையளித்தனர். 
 
இதன்போது பொலிஸ் பொறுப்பதிகாரி பந்துல விஜயவர்த்தன மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X