2025 மே 12, திங்கட்கிழமை

திருமலை விபத்தில் மாத்தறை பிரஜை பலி

Kanagaraj   / 2013 ஜூன் 19 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை மட்டக்களப்பு ஏ-15 வீதியில் பஸ் மோதியதில் பாதசாரி ஒருவர் மரணமானார்.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை  இரவு 8.00 மணியளவில்  சீன்குடா மீன்பிடி துறைமுகத்திற்கு முன்னால் இடம் பெற்றுள்ளது.
திருகோணமலையில் இருந்து கிண்ணியா ஊடாக கொழும்புக்கு  சேவையில் ஈடுபடும் பஸ்ஸே இவர்  மீது மோதியுள்ளது.

பஸ் சாரதியும் நடத்துனரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டள்ளனர். இருவரும் மிகுந்த மதுபோதையில் இருந்ததாக  பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

பஸ் வண்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சீனக்குடா பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்ண்டுள்ளனர்.

சம்பவத்தில் பலியான பாதசாரி மாத்தறையை பிறப்பிடமாகவும்  சீனக்குடா மீனவர் கிராமத்தில் வசித்தவருமான  கே.சாந்தகுமார என  அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவரது சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படுவதற்காக திருகுhணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X