2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வர்ண மீன்பிடித்தொழில் ஈடுபட்டவர் மரணம்

Kanagaraj   / 2013 ஜூன் 21 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

வர்ண மீன்பிடிக்கும் தொழில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர் மூச்சுத்திணறல் காரணமாக மரணமடைந்துள்ளார்.

திருகோணமல  பூம்புகார் கிழக்கை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 40 வயதான காளி பூமிநாதன் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இன்று காலை 9.00 மணியளவில் கடலுக்கு சென்று இவர் வர்ண மீன்பிடித்தொழில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இவர் மரணமடைந்துள்ளார்.

வர்ண மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொள்ளும் இவர் ஒக்சிஜன் தாங்கிகளுடன் கடலுக்குள் சென்ற போது வாயு கசிந்து உடலுக்குள் சென்ற காரணத்தினாலே இவர் உயிரிழந்திருக்கலாம் என்று வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மரணமடைந்தவருடன் வர்ண மீன் பிடிப்பதற்காக சென்ற ஏனைய இரு நபர்களிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X