2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தேசிய மொழிக் கொள்கை அமுலாக்கல் திட்டம்; பிரதான நிகழ்வு திருமலையில்

Menaka Mookandi   / 2013 ஜூன் 27 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


தேசிய மொழிக்கொள்கை அமுலாக்கலின் செயல்திட்டத்தின் கீழ் ஆசிய மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட பிரதான நிகழ்வொன்று திருகோணமலை நகரசபையின் பொதுநூலக மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமானது.

இந்நிகழ்விற்கு காலி, நுவரெலியா, பதுளை, பண்டாரவளை, மாவட்டத்தின் மாநகரசபையின் மேயர்கள் மற்றும் வைத்தியசாலைகளின் பொறுப்பாளர்கள், பிரதேசசபை உத்தியோகஸ்தர்கள் என சுமார் 45பேர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக திருகோணமலையின் நகரசபையின் உறுப்பினர் த.கௌரிமுகுந்தன் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்தார். நகரசபையின் செயலாளர் ஏ.எல்.எம்.நபீல், நகரசபையின் தலைவர் க.செல்வராசா ஆகியோர் அதிதிகளாக  கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X