2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர் கலை கூடத்தின் சித்திர கண்காட்சி

A.P.Mathan   / 2013 ஜூன் 29 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சசிக்குமார்
 
திருகோணமலை சிறுவர் கலை கூடத்தின் சித்திர கண்காட்சி இன்று சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் கிழக்கு மாகாண கலாசார அமைச்சின் பணிப்பாளர் யு.வெலிகல பிரதம அதிதியாக கலந்து கொண்டு கண்காட்சியினை நாடாவை வெட்டித் திறந்து வைத்தார். எழுத்தாளர் ஊக்குவிப்பு நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஓ.கே.குணநாதன் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார். 
 
ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி சித்திரபாட ஆசிரியர் அருள்பாஸ்கரனின் மாணவர்களால் இக்கண்காட்சி நடத்தப்பட்டது. பெருமளவிலான பெற்றோர்களும் பொதுமக்களும் இக்கண்காட்சியினைப் பார்வையிட்டனர்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X