2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இனத்துக்கொரு சட்ட அமுலாக்கமா?: ஆயர் சுவாமிப்பிள்ளை

Menaka Mookandi   / 2013 ஜூன் 30 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கீதபொன்கலன்

'நாட்டின் சட்ட அமுலாக்கல் நடைமுறை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இனத்திற்கொரு சட்ட அமுலாக்கல் நடைமுறை தற்போது கையாளப்படுகின்றதா என்ற சந்தேகம் வேகமாக பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகின்றது' என்று திருகோணமலை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் அதிவண.அருட்கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை கூறினார்.

திருகோணமலை ரொட்டரி கழகத்தின் 35ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 'இரண்டு வருடங்களுக்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 'கீரீஸ் மனிதன்' என்ற ஒரு விடயம் அச்சத்தை ஏற்படுத்திய போது, பொது மக்கள் தமது பாதுகாப்பிற்காக சிறு ஆர்பாட்டங்களை நடத்தியும் கீரீஸ் மனிதன் என தாம் சந்தேகித்தவர்களை தாக்கியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளில் கலந்து கொண்டவர்களை பாதுகாப்பு படையினர் கண்மூடித்தனமாக தாக்கியதுடன் அதிகமானவர்களை கைது செய்து சிறைகளிலும் அடைத்தனர். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது' என்றும் ஆயர் சுவாமிப்பிள்ளை குறிப்பிட்டார்.

'சில மதவாத அமைப்புக்கள் பள்ளிவாசல்களையும் தேவாலயங்களையும் மதகுருமார்களையும் தாக்கி சேதங்களை ஏற்படுத்தி வருகின்றது. மொத்தத்தில் அவ்வமைப்புக்கள் சட்டத்தை தமது கைகளில் எடுத்து செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

ஆனால் இவர்களை இதுவரை யாரும் கைது செய்யவும் இல்லை தண்டிக்கவும் இல்லை. இது ஐனநாயக சமூகத்திற்கு ஏற்புடைய நடைமுறை அல்ல.' என்றும் அவர் மேலும் சுமட்டிக்காட்டினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X