2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நன்றி கூட செலுத்த முடியாத நிலை: அஸாத் சாலி

Super User   / 2013 ஜூன் 30 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


நாட்டில் மக்களுக்கு நன்றி கூட செலுத்த முடியாத நிலை உள்ளது என கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி தெரிவித்தார்.

இந்த நாட்டில் மக்கள் எனக்காக நோன்பு நோற்றார்கள். இவர்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவே நான் இங்கு வந்தேன். எனினும் அதற்கு முடியாத நிலை உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

கிண்ணியாவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"இங்கு நன்றி செலுத்துவதற்கு கூட்டம் போட இருந்த போது காணிக் காரருக்கு இராணுவத்தினர் அடிக்கிறார், ஒலிபெருக்கி கொடுக்க வேண்டாமென்று முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீதின் செயலாளர் மஹ்ரூப்தான் நிறுத்தினார். இன்று நாடாளுமன்றத்தில் 15 முஸ்லிம் எம்.பிக்கள் உள்ளனர். இதில் யார் முஸ்லிம்களுக்கு குரல் கொடுத்தவர். இந்த அஸாத் சாலி மட்டும்தான்.

அதுமட்டுமா? இன்று இறைச்சி கடையை உடைக்கின்றார்கள்,  தீ வைக்கின்றார்கள், யாருக்கும் பேச முடியாது. ஆனால் பொதுபலசேனா எல்லா இடங்களிலும் கூட்டம் நடத்துகின்றனர். ஆனால் முஸ்லிம்களுக்கு ஒரு கூட்டம் போட முடியாது.

முஸ்லிம்களுக்கு மாத்திரம்தான் இந்த அநீதியா? என்ன நியாயம் இது? எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்று பார்ப்போம். ஆனால் முஸ்லிம்களுக்கு எங்கே அநியாயம் நடந்தாலும் அங்கே எல்லாம் இந்த அஸாத் சாலி வருவார். நான் இங்கு தனியே வரவில்லை. சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் கூட்டிக் கொண்டே வந்திருக்கோம்" என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X