2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

திருமலை இந்துக் கல்லூரி பழைய மாணவர் ஒன்று கூடல்

Kogilavani   / 2013 ஜூலை 01 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.சசிக்குமார்


திருகோணமலை, இராம கிருஷ்ண சங்கம் ஸ்ரீ கோணேஷ்வரா இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்  ஒன்றுகூடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

கல்லூரி திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உளநலத்துறை வைத்திய நிபுணர் மருத்துவர் த.கடம்பநாதன், பத்திரகாளி அம்பாள் ஆலய பிரதம குரு சோ.ரவிச்சந்திரக் குருக்கள், ஓய்வு நிலை வலயக் கல்வி பணிப்பாளர் கு.திலகரெத்தினம், கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் த.சச்சிதானந்தராஜா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இப்பாடசாலையின் பழைய மாணவர்களாகிய மேற்படி நால்வரும் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பதை கருத்திற்கொண்டு அவர்கள் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது, பழைய மாணவர் சங்கத்தின் செய்தி மடலான 'சாரல்'  இதழும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதேவேளை, பழைய மாணவர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X