2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கிராம உத்தியோகத்தரை தாக்கிய சந்தேகநபர்கள் கைது

A.P.Mathan   / 2013 ஜூலை 04 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
 
திருகோணமலை பட்டணமும் பிரதேச செயலகம் கோணேசபுரி கிராம உத்தியோகத்தர், சாம்பல்தீவு அலவலகத்தில் வைத்து கிராமவாசிகளால் தாக்குதலுக்கு உள்ளாகினார். கோணேசபுரி சுனாமி வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடுகளில் தற்காலிகமாக குடியிருப்பவர்களை 2 வாரங்களுக்குள் வெளியேறுமாறு அறிவித்தல் விடுத்திருந்த நிலையில், இக்காலக்கெடு இன்றுடன் முடிவடைகின்றது. இதனால் ஆத்திரம் கொண்டவர்களே இத்தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
தாக்குதலுக்கு உள்ளான கிராம அலுவலகர் எஸ்.சதீஸ்கரன், திருகோணமலை பொது வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
விசாரணைகளை மேற்கொண்ட உப்புவெளி பொலிஸார், தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் செல்வகுமரன், வேலுப்பிள்ளை என்ற இருவரைக் கைது செய்துள்ளனர். 
 
இவ்விருவரும் நாளை வெள்ளிக்கிழமை திருகோணமலை நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட உள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X