2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சூரிய ஒளியில் மின் பெறும் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 05 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்,எம்.பரீத்


திருகோணமலை மாவட்டத்தில் மின்சார பாவனையற்றவர்களுக்கு சூரிய ஒளியின் மூலம் மின்னைப் பெறும் உபகரணங்கள் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக் கிராமமான குச்சவெளி, மூதூர், தம்பலகாமம் போன்ற கிராமங்களில் உள்ளவர்களுக்கே இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம் வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம், நீர்வழங்கல்  அமைச்சின் நிதி ஒதுக்கிட்டின் கீழ் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X