2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

லொறி வீதியை விட்டு விலகி விபத்து

Suganthini Ratnam   / 2013 ஜூலை 05 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எச்.அமீர்

திருகோணமலையிலிருந்து மூதூர் வழியாக சீமெந்துப் பொதிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறியொன்று வீதியை விட்டு விலகிச்சென்று வீடொன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

மூதூர் – கிண்ணியா வீதியில் நத்வதுல் உலமா அரபுக்கல்லூரி சந்தியை அண்மித்துள்ள பகுதியிலேயே இன்று வெள்ளிக்கிழமை  அதிகாலை 4.10
மணியளவில்  இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த லொறியை செலுத்திவந்த சாரதியும் உதவியாளரும் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X