2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சூங்கான் குழி குளத்தில் மூழ்கி ஒருவர் பலி

Super User   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா, சூங்கான் குழி குளத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த குடும்பஸ்தார் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கிண்ணியா, அமான் வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய முகம்மது அமசீன் அப்துல் றவூப் என்பவரே ஆவர். இந்த குளத்தில் அபிவிருத்தி செய்வதற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் வீழந்த இவருக்கு நீச்சல் தெரியாததால் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

மீன் பிடிக்கச் சென்ற இவரை அவரது மகன் தேடிச் சென்ற போது இவர் உயிரிழந்த சம்பவம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X