2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

றிஸானாவின் வீட்டை ஜயவர்தனபுர உப வேந்தர் பார்வை

Super User   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எச்.அமீர்


றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்காக அமைக்கப்பட்டுவரும்  வரும் வீட்டின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ளன.

இந்த வீட்டின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி ரி.என்.எல்.கருணாரத்ன, வர்த்தகப் பொருளாதாரத்துறைத் தலைவர்  கலாநிதி அநுர மார உதுமான்கே, கேணல் விகும் லியனகே உள்ளிட்ட பலர் மூதூரிற்கு விஜயம் செய்திருந்தனர்.

றிஸானா நபீக்கிக்கு மரண தண்டனை நிறை வேற்றப்பட்டதன் பின்பு மிகவும் வறுமையில் வாழும் அவரது குடும்பத்தினருக்கு வீடொன்றை அமைத்துக் கொடுப்பதாக பலர் வாக்குறுதியளித்தனர்.

எனினும் அவர்களில் எவரும் முன்வராத நிலையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக சமூகத்தினரும் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து வீடொன்றை அமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X