2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அகத்தியர் ஸ்தானத்திற்கு மாவட்ட செயலாளர் விஜயம்

Super User   / 2013 நவம்பர் 27 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வாவி கங்குவேலி அகத்தியர் ஸ்தானத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

அகத்திய மாமுனியால் தோற்றுவிக்கப்பட்ட இந்த ஸ்தானம், கடந்த கால யுத்த சூழ்நிலைகளால் முற்றாக  பாதிக்கப்பட்டுள்ளது. இதனை புனரமைக்க  மாவட்ட செயலாளரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.

இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட செயலாளர் குறித்த இடத்தை புனரமைப்பதற்கு அனுமதி வழங்கி இருந்தார். அதற்கு முன்னோடியாக குறித்த இடத்தினை அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த நிலையம் புனரமைக்கப்படுவதற்கு தேவையான நிதியினை தான் பெற்றுத் தருவதாகவும் இதன்போது அவர் உறுதியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .