2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை மக்களின் ஒற்றுமை சிதைக்கப்படும்போது, அந்நிய நாடுகளின் தலையீடு அதிகரிக்கும்'

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எச்.அமீர்


இலங்கை மக்களுக்குள் நிலவும் ஒற்றுமை சிதைக்கப்படுகின்றபோது, அந்நிய நாடுகளின் தலையீடு அதிகரிக்கும் என முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மர்ஹும் எம்.ஈ.எச்.மஹ்ரூபின் 16ஆவது வருட நினைவுதினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ருப் தலைமையில் மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் ஐக்கியமாக வாழ்வது அவசியமாகும். ஐக்கிய தேசிக் தேசிய கட்சி என்று கூறுகின்றபோது 'ஐக்கியம்' என்ற சொல்லையே நான் முக்கியமாகப் பார்க்கின்றேன்.

இலங்கையின் புத்திஜீவிகளும் பொருளாதார பலம் வாய்ந்தவர்களும் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். நாட்டின் நிலைமை காரணமாகவே அவர்கள் வெளியேறியுள்ளனர்.

மர்ஹும் மஹ்ரூப் ஐக்கிய தேசியக் கட்சியை வளர்ப்பதிலும் அதனைப் பலப்படுத்துவதிலும் உயரிய பங்களிப்பைச் செய்த ஒருவராவார்.

ஒருபோதும் அவர் எவரது மனம் நோகும் படியும்   நடந்து கொண்டதில்லை. எல்லோரோடும் எப்போதும்  புன்முறுவல் பூத்த முகத்துடனேயே அவர் பேசுவார். அவ்வாறே மக்களுக்கும் அவர் சேவையாற்றினார்' என்றார்.

இதன்போது  இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதோடு,  ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் மஹ்ரூப் நினைவு தினப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .