2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் விழுந்து மரணம்

Suganthini Ratnam   / 2014 மே 23 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்றுகொண்டிருந்த  கிண்ணியா வான் எல முஸ்லிம் கொலணியைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தாயான ராசீக் பரீத் சாபீரா (வயது 40) என்பவர் தவறிக் கீழே விழுந்து மரணமடைந்ததாக கிண்ணியா தள வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று வியாழக்கிழமை கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஒருவருக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, தனது உறவினர் ஒருவருடன் மோட்டார் சைக்களில் பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிள் வீதியிலுள்ள கிடங்கொன்றில் விழுந்ததால்,  இவரின் தலையின் பின்புறம் அடி பட்டு மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இவர் மரணமடைந்ததாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .