2026 மார்ச் 30, திங்கட்கிழமை

ஞாயிறு, போயா தினங்களில் பிரத்தியேக வகுப்புக்கள் நிறுத்தம்

Kogilavani   / 2014 மே 23 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

ஞாயிறு மற்றும் போயா தினங்களில் பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துவதனை நிறுத்துவதற்கு கிழக்கு மாகாண சபை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை அமைச்சரவை வாரியத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக வியாழக்கிழமை (22) அறிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர்,

'ஞாயிறு மற்றும் போயா தினங்களில் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறுவதனால் மாணவர்களின் சமய கல்வியினை கற்க முடியாதுள்ளதாக, பிரதமரும், புத்தசாசன அமைச்சருமான டி.எம்.ஜயரத்ன அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார்.

மேற்படி விடயத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததினால் கிழக்கு மாகாணத்தில் குறித்த விடயத்தை அமுல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநருரிடம்  பிரதமர் கோரியுள்ளார்.

இதன் பின்னரே போயா தினங்களிலும், பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் பிற்பகல் 2.00 மணி வரைக்கும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறுவதை நிறுத்துவதற்கான அங்கீகாரத்தை கிழக்கு மாகாண சபை வழங்கியது' என தெரிவித்தார்.


  Comments - 0

  • Nijamudeen Friday, 23 May 2014 09:48 AM

    நல்ல விடயம் அமைச்சரே. ஆனால் எத்தனையாவது தடவை இது அரசினால் கூறப்படுகின்றது என்று சொல்ல முடியுமா? இதை கண்காணிப்பு செய்ய ஏதும் ஏற்பாடுகள் உண்டா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .