2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சாரணர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 மே 31 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் சாரணர்களுக்கான சின்னஞ்சூட்டும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை(30) இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் சி.ஆனந்தசிவம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடவிதானங்களில் திறமைகாட்டியவர்களுக்கு விஷேட பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது, விவேக ரதம் என்னும் பெயரிலான சஞ்சிகையும் வெளியிடப்பட்டதுடன். மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X