2026 மார்ச் 30, திங்கட்கிழமை

திருமலையில் ஆணின் சடலம் கரையொதுங்கியது

Kogilavani   / 2014 ஜூலை 20 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை, கோட்டை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (20) காலை கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, வித்தியாலய ஒழுங்கை என்ற விலாசத்தைச் சேர்ந்த நாராயணபிள்ளை பாஸ்கரநாதன் வயது (62) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவரது நெருங்கிய உறவுகள் வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும் இவர் திருகோணமலையில் தனியாக வசித்து வந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில், மட்டக்களப்பில் வசித்து வருவதாக கூறப்படும் இவரது  மற்றுமொரு உறவினருக்கு  தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில்  திருகோணமலை, துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .