2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கு மூக்குகண்ணாடிகள் விநியோகம்

Kogilavani   / 2014 ஜூலை 25 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.சசிக்குமார்


கல்வி அமைச்சு சுகாதார அமைச்சுடன் இணைந்து 'அனைவருக்கும் பார்வை' என்னும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

திருகோணமலை கல்வி வலயத்தில் பரிசோதிக்கப்பட்ட முதல் தொகுதி மாணவர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை (25) மூக்குகண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தினால் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

அமெரிக்க தொண்டு நிறுவனமொன்றின் அனுசரணையில்  நாட்டிலுள்ள அரச பாடசாலை மாணவர்களுக்கு இலவச கண்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பார்வை குறைப்பாடுடையவர்களுக்கு இலவசமாக மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வின் போது  சல்லி அம்பாள் வித்தியாலயம், சாம்பல்தீவு தமிழ் வித்தியாலயம். பெருந்தெரு விக்நேஸ்வரா மகா வித்தியாலயம், ஸ்ரீசண்முகா இந்துமகளிர் கல்லூரி என்பனவற்றைச் சேரந்த 102 மாணவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .